கைலாசா நாட்டில் மூன்று ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை - கலகலப்பாக உரையாற்றிய நித்தியானந்தா


கைலாசா நாட்டில்  மூன்று ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை -  கலகலப்பாக உரையாற்றிய நித்தியானந்தா
x
தினத்தந்தி 23 Aug 2020 12:59 PM GMT (Updated: 23 Aug 2020 1:07 PM GMT)

கைலாசா நாட்டில் மூன்று ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா கூறினார்.


ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நித்தியானந்தா,  கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். 

திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருவதாக தெரிவித்த நித்தியானந்தா, சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என்றும் சிரித்தவாறு கூறினார்.


Next Story