ரஷ்யாவில் இந்திய தூதரகப் பள்ளிக்கு தமிழகத்திலிருந்து 2 ஆசிரியர்கள் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


ரஷ்யாவில் இந்திய தூதரகப் பள்ளிக்கு தமிழகத்திலிருந்து 2 ஆசிரியர்கள் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 24 Aug 2020 5:42 PM GMT (Updated: 24 Aug 2020 5:42 PM GMT)

ரஷ்யாவில் இந்திய தூதரகப் பள்ளிக்கு தமிழகத்திலிருந்து 2 ஆசிரியர்கள் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை வளாகத்தில், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கீதா சீனிவாசன் என்பவர் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் செயல்படும் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆக. 22-ம் தேதி விமானம் மூலமாகப் புறப்பட்டுச் சென்ற அவர், இன்று அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ரஷ்யா- மாஸ்கோ நகரின் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற தமிழகத்திலிருந்து இரு ஆசிரியர்கள் தேர்வாகியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சாதனை படைத்துள்ள ஆசிரியர்கள் கோவை- திருமதி.கீதா சீனிவாசன், சென்னை- திருமதி.தந்தரா ரெட்டி ஆகியோரின் கல்விப்பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story