மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி தகவல்


மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2020 3:00 AM GMT (Updated: 25 Aug 2020 3:00 AM GMT)

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று சவீதா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, 

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா, இணைய வழியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடி மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய் சிகிச்சை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகமாகும்.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 3,250 மருத்துவப் படிப்பு இடங்களுடன் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1,650 புதிய இடங்களையும் சேர்த்து 2021-22-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்குவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story