மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை


மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 25 Aug 2020 11:26 AM GMT (Updated: 25 Aug 2020 11:26 AM GMT)

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 31-ஆம் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், அதன் அடிப்படையில் அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஆராய்ந்து அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இந்த குழுவுடன் ஏற்கனவே பல முறை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையிலும், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி மாலை 3 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

அந்த ஆலோசனையில் ஊரடங்கு குறித்தும், இபாஸ் நீக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கருத்துக் கேட்ட பிறகே ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story