திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு


திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு
x

திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்துகிறார். இன்று பிற்பகலில் தஞ்சை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார். 

முன்னதாக நேற்று காலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்தி விட்டு மாலையில் நாகை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். இரண்டு மாவட்டங்களிலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  

Next Story