சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு


சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
x
தினத்தந்தி 28 Aug 2020 11:25 AM GMT (Updated: 28 Aug 2020 11:25 AM GMT)

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.  கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்திற்கு மேல் சென்றது.

இந்நிலையில் கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400 வரை குறைந்தது.  இதன்படி கடந்த 12ந்தேதி தங்கத்தின் விலை, அதற்கு முந்தைய நாள் விலையில் இருந்து ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையானது.

இதேபோன்று கடந்த 24ந்தேதி பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து ரூ.40,024க்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ந்து தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது.  இதன்படி, சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.320 குறைந்து ரூ.39 ஆயிரத்து 176க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,897 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story