மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பொதுப்போக்குவரத்து தொடங்குமா..? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை + "||" + Lockdown Relaxations Publictransport Chief Minister Palanisamy advised today

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பொதுப்போக்குவரத்து தொடங்குமா..? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பொதுப்போக்குவரத்து தொடங்குமா..? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பொதுப்போக்குவரத்து தொடங்குமா.. மாவட்ட கலெக்டர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்து  கொண்டேவருகிறது. நாள்தோறும் ஏறத்தாழ 6 ஆயிரம்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.


இதற்கிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிக்கவேண்டும், இ-பாஸை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. இ-பாஸ் நடைமுறை இருந்தால்தான் தொற்று தொடர்புகளை கண்டறிய முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால், இ-பாஸ் முறை தொடரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், 8-ம் கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் மாதமும் நீட்டிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காலையில் மாவட்டஆட்சியர்களுடன் காணொலி மூலம் நடக்கும் ஆலோசனையில், மாவட்டவாரியாக தொற்று நிலவரம், தடுப்புப் பணிகள் குறித்து விவாதிப்பதுடன், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்.

பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே, ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதையே இன்றும் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. ஆனால், தொற்றை கருத்தில்கொண்டு சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர், இன்று மாலை அல்லது நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஊரடங்கால் வறுமை காரணமா? போலீசார் விசாரணை
மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊரடங்கால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. டெல்லி இந்தியா கேட் பகுதியில் உடற்பயிற்சி செய்ய திரண்ட மக்கள் !
ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3. ஊரடங்கின் நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஊரடங்கு மூலோபாய நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
4. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35% ஆக உயர்ந்து உள்ளது
கிராமப்புற வேலைகள் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் கூறி உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.