மாநில செய்திகள்

சிறுமியை மிரட்டி கடந்த 10 மாதங்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம்; 8 மாதம் கர்ப்பம் + "||" + Intimidated girllast 10 months3 people raped

சிறுமியை மிரட்டி கடந்த 10 மாதங்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம்; 8 மாதம் கர்ப்பம்

சிறுமியை மிரட்டி கடந்த 10 மாதங்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம்; 8 மாதம் கர்ப்பம்
காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், தாய் வீட்டிற்கும், தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்த நிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிறுமியை பரிசோதித்த போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியதை கண்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சிறுமிக்கு நடந்தது என்ன ? என்பது குறித்து விசாரித்த போது கடந்த 10 மாதங்களில் 3 பேர் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

தாய்மாமா வீட்டில் சிறுமி தனியாக இருந்த நேரத்தில், கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியரான 55 வயது உதயணன் என்பவர், மதுபோதையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. அதே ஊரைச் சேர்ந்த ராம்ராஜ், சக்தி ஆகிய இரு இளைஞர்களும் அத்துமீறியதால், சிறுமி கர்ப்பம் அடைந்ததாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து 55 வயது காமுகன் உதயணனை பிடித்து, அப்பகுதி மக்கள் விசாரித்த போது சிறுமியிடம் அத்துமீறியதை ஒப்புக் கொண்டதால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதே போல சக்தி என்பவனுக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமேடையில் பெண்ணுக்காக காத்திருந்த அவனை மாலையும் கழுத்துமாக கைது செய்து அழைத்துச்சென்றதால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய ராமராஜ் என்பவனையும் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் வயிற்றில் வளரும் சிசுவைக் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால், காவல்துறையினர் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி குவாரி டெண்டர் அறிவிப்பு ரத்து - ஐகோர்ட்டில் அரசு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி குவாரி டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.