தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 3:14 PM GMT (Updated: 30 Aug 2020 3:14 PM GMT)

தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேலும் 80,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,100 பேருக்கும், இதுவரை 45,79,770 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,406 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,249  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,246 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  7,231 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 57 பேர், தனியார் மருத்துவமனைகளில் 37 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்தனர்.  

சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,729 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,33,154லிருந்து 1,34,436 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,727-ல் இருந்து 3,62,133 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story