மாநில செய்திகள்

19-ம் ஆண்டு நினைவு நாள்; மூப்பனார் நினைவிடத்தில் ஜி.கே.வாசன் அஞ்சலி + "||" + 19th Anniversary; GK Vasan tribute at Moopanar memorial

19-ம் ஆண்டு நினைவு நாள்; மூப்பனார் நினைவிடத்தில் ஜி.கே.வாசன் அஞ்சலி

19-ம் ஆண்டு நினைவு நாள்; மூப்பனார் நினைவிடத்தில் ஜி.கே.வாசன் அஞ்சலி
ஜி.கே.மூப்பனாரின் 19-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மூப்பனார் நினைவிடத்தில் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,

ஜி.கே.மூப்பனாரின் 19-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது மகனும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் நேற்று காலை, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


ஜி.கே.மூப்பனாரின் 19-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் த.மா.கா.வின் தலைவர்கள், தொண்டர்கள், இயக்கத்தின் நலன் விரும்பிகளும், இன்றைக்கு அவரவர் இல்லங்களிலேயே அவரது படத்திற்கு புகழஞ்சலி செலுத்துகிறீர்கள். தங்கள் அத்தனை நல்உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை இருகரம் கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை செய்ய, தயார் நிலையில் இருப்போம். அதனை வெற்றிகரமாக மேற்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.