மாநில செய்திகள்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + Water opening at Papanasam and Manimuttaru dams tomorrow Order of Chief Minister Palanisamy

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும், சிறப்பு நிகழ்வாக, 1-9-2020 (நாளை) முதல் 15-9-2020 வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1,400 கன அடி (வினாடிக்கு) வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள 24,090 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளில் பகுதியாக கார் பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக, 16-9-2020 முதல் 31-10-2020 வரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 கனஅடி (வினாடிக்கு) வீதமும் ஆக மொத்தம் 4993.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு
கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
3. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது.
4. ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்ப்பு: பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்பு
இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்க உள்ளார்.
5. பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.