மாநில செய்திகள்

பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு + "||" + The Government of Tamil Nadu has issued guidelines for opening parks

பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய தளர்வுகளை அறிவித்து நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  அதில், தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் வேறு சில குறிப்பிட்ட பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதன்படி,

* பூங்காக்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.
 
* உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பூங்காக்களில் நுழைய அனுமதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
2. பள்ளிகளுக்கு மாற்று கல்வி நாட்காட்டி; மத்திய கல்வித்துறை வெளியிட்டது
பள்ளிகளுக்கு 8 வார காலத்துக்கான மாற்று கல்வி நாட்காட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
3. தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டது
தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.