சென்னையில் பல்வேறு இடங்களில் மழை


சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
x
தினத்தந்தி 1 Sep 2020 2:46 AM GMT (Updated: 2020-09-01T08:16:48+05:30)

சென்னையில் கிண்டி, வடபழனி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, வடபழனி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் தி.நகர், சைதாப்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Next Story