நாடு முழுவதும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்குகிறது
தமிழகத்தில் 34 மையங்களில் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ- ல் தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, ஜேஇஇ பிரதான தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு செப் 1-ம் தேதி (இன்று) தொடங்கி 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 பேர் எழுதுகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல், தேர்வர்கள் சனிடைசர்களும் கொண்டு வருவதை காண முடிந்தது. சமூக இடைவெளியுடன் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story