மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி + "||" + Action will be taken against schools violating the rules for online classes - Government of Tamil Nadu confirms in Chennai High Court

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
சென்னை, 

ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

மேலும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறது என எப்படி கண்காணிக்கப்போகிறார்கள்? என்பது குறித்தும் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். 

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மேலும் மலைவாழ் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பெறலாம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்பு விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல- பள்ளி கல்வித்துறை
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
3. ஆன்லைன் மூலம் வகுப்புகள்: 27 சதவீத மாணவர்களிடம் செல்போனோ, லேப்டாப்போ கிடையாது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பாடம் படிக்க 27 சதவீத மாணவர்களிடம் நவீன செல்போனோ அல்லது லேப்டாப்போ இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது.
4. அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்; கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
5. திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைப்பு
திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...