திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி


திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி
x
தினத்தந்தி 1 Sep 2020 10:56 AM GMT (Updated: 2020-09-01T16:26:28+05:30)

திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை, 

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Next Story