பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதி பருவத்தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7ந் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story