கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2020 6:19 AM IST (Updated: 2 Sept 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15-ந்தேதிக்கு பிறகு நடத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். இறுதி ஆண்டு தேர்வுகள் மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பி.ஆர்க் எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் 7-ந்தேதி முதல் www.tneaonline.orgஎன்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story