வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராகும் நாளாக (18 வயது முடிந்தவர்கள்) கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியை மேற்கொள்ள, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 16-ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ந்தேதியில் இருந்து டிசம்பர் 15-ந்தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந்தேதி இறுதி செய்யப்படும். ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
நவம்பர் 16-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை (6, 7, 8, 8ஏ) அளிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை, வாக்குச்சாவடி அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி அலுவலரிடம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் அதிகாரிகளிடம் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கலாம். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம்.
விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றுக்கான சான்று இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். குடியிருப்பு முகவரிக்கான சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை (இவற்றில் ஏதாவது ஒன்று) மற்றும் குடிநீர், தொலைபேசி, மின்சாரம், கியாஸ் (ஏதாவது ஒன்றின்) இணைப்புக்காக சமீபத்தில் பெறப்பட்ட பில், வங்கி, கிசான், தபால் அலுவலக பாஸ்புக், (ஏதாவது ஒன்றின்) நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வயதை நிரூபிக்கும் சான்றாக, பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளியை முடித்து வெளிவரும் போது வழங்கப்படும் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை சமர்ப்பிக்கலாம். 25 வயதுக்கு குறைவான விண்ணப்பதாரர் இதில் ஒன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
www.nvsp.in என்ற இணையதளம், வாக்காளர் ஹெல்ப்லைன் செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறங்கியுள்ளார்.
முதலாவதாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) சத்யபிரதசாகு இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இன்று மாலை 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நவம்பர் 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால் இரட்டை பெயர் பதிவுகள், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து சத்யபிரத சாகு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கிறார்.
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு சுருக்க திருத்த பணிகளை தொடங்குவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டத்தையும் நடத்த வேண்டியது உள்ளது. மேலும் புதிதாக பெயர் சேர்ப்பது, நீக்குவது, பிழை திருத்துவது போன்ற பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்களையும் நடத்த வேண்டும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் இருப்பதால், இதுபோன்ற பணிகள் பற்றிய ஆலோசனையை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொள்கிறார். இந்தக் கூட்டம் முடிந்ததும் முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

Related Tags :
Next Story