அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி


அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 3 Sept 2020 4:03 AM IST (Updated: 3 Sept 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன். இவர் தன்னுடைய தொகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வந்தார்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால், தனக்கு ஏதேனும் கொரோனா தொற்று இருக்குமா என சந்தேகித்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதன்மை தொற்று எனவும், தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story