தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.5,243 கோடி கடந்த ஆண்டை விட 12 சதவீதம் குறைவு
தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5 ஆயிரத்து 243 கோடி வசூலாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் மாதந்தோறும் அதிகரித்தவாறு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5 ஆயிரத்து 243 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 ஆயிரத்து 973 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 12 சதவீதம் அளவு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளது. கடந்த 5 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது ஜி.எஸ்.டி., வருவாய் குறைவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளதால், அடுத்தடுத்த மாதங்களில் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Tags :
Next Story