ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு


ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Sep 2020 5:21 AM GMT (Updated: 2020-09-03T10:51:36+05:30)

ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு,

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குறிப்பாக மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து மட்டுமே தொடங்கப்பட்டது.

மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளில் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதேபோல் பயணிகள் ரெயில் சேவை தொடங்கும் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

லக்காபுரத்திலிருந்து ஈரோட்டை நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story