தமிழகத்தில் மேலும் 5,892 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் 20 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,110-பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,45,851-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,608- ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 968-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82,901-கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 52,070-ஆக உள்ளது.
Related Tags :
Next Story