கேரளாவிற்கு மணல் கடத்தல்; தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


கேரளாவிற்கு மணல் கடத்தல்; தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தினத்தந்தி 3 Sept 2020 6:52 PM IST (Updated: 3 Sept 2020 6:52 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

தமிழகத்தில் நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை பேருந்து நிலைய கட்டிடத்தில் பள்ளம் தோண்டியபொழுது தாமிரபரணி ஆற்று மணலானது சட்டவிரோத வகையில் கேரளாவிற்கு கடத்தப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நெல்லையை சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 5ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Next Story