கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு


கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 10:52 AM IST (Updated: 4 Sept 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த வசந்தகுமார் எம்.பி.க்கு கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி வசந்தகுமார் உயிரிழந்தார்.

மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

Next Story