கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள்: மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் கண்டுபிடிப்பு


கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள்: மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2020 5:22 AM GMT (Updated: 4 Sep 2020 5:30 AM GMT)

கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள்: மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 78 ஆயிரத்து 517 நபர்கள் பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் இரண்டு தவணைகளில் ரூ. 60 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவருகின்றன. மேலும் கடந்த 2 ஆம் தேதி பிரதமரின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story