காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 7 பேர் உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த 4 பெண்களில் 2 பேர் இறந்தால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தெரிகிறது.
வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபாவளிக்கு தயார் நிலையில் இருந்த வெடி பாக்ஸ்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

Related Tags :
Next Story