மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை - மு.க. ஸ்டாலின்


மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Sep 2020 7:54 AM GMT (Updated: 4 Sep 2020 7:54 AM GMT)

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 குறித்த சூழலியல் கருத்தரங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, இந்து குழுமம் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் காணாலி காட்சி மூலம் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களும் மக்கள் விரோத சட்டங்களாக உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அம்சங்கள் தனியார் மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களையே திமுக எதிர்க்கிறது.  திட்டங்கள், தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை.

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது. மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் குறித்து கேள்விகேட்க முடியாத நிலையை உருவாக்குகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிராக திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story