பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் அறிவிப்பு


பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர்  அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 3:59 PM IST (Updated: 4 Sept 2020 3:59 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 5 நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், குருங்குடியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர், பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


Next Story