தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதுபவர்களுக்காக கோவை-சென்னை, நெல்லை-மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக கீழ்க்கண்ட முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
* கோவை-சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் (வண்டி எண்: 06101) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (06102) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.
* நெல்லை-மதுரை (06103) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக மதுரை-நெல்லை (06104) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

Related Tags :
Next Story