சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 4:10 AM IST (Updated: 5 Sept 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், இலக்காபுரம் கிராமம், புதுவலசு என்னுமிடத்தில் 3-ந்தேதி அன்று சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்து கொண்டிருந்த 2 இரு சக்கர வாகனங்களும் மோதிய விபத்தில், குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மோகம்புரி, அவருடைய மனைவி பொங்கி அம்மாள், சின்னுசாமி என்பவரின் மகன் பாலசுப்பிரமணி மற்றும் பொன்னுசாமி என்பவரின் மனைவி பார்த்தாள் ஆகிய 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story