கன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம்... தேசிய கட்சிகளில் யார் யாருக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு யார் போட்டியிடுவது என பாஜக மற்றும் காங்கிரசுக்குள் தற்போதே போட்டி எழுந்துள்ளது.
சென்னை:
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற வசந்தகுமார், அண்மையில் உயிரிழந்தார். அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் முதலில் தொழிலுக்கே முக்கியத்துவம் எனக் கூறியுள்ள விஜய் வசந்த், அரசியலை பொறுத்தவரை கட்சியின் கருத்துக்கிணங்க நடக்கப் போவதாக கூறியுள்ளார். அதேசமயம், குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, கட்சியின் முடிவின்படியே செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவோம் என கே.வி. தங்கபாலு தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகளுடன் பேசி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவோம் என அவர் கூறினார்.
மறுபுறம் பாஜக தரப்பிலும் இடைத்தேர்தலில் களமிறங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது.
கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தால், இடைத்தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
14.93 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் களமிறங்கப் போவது யார், வெற்றி வாகை சூடப்போவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Tags :
Next Story