10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் தகவல்


10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் -  சென்னை வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 5 Sept 2020 1:03 PM IST (Updated: 5 Sept 2020 1:03 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிடு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவடங்களில் ஓரிடு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மனி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடர்ந்து 3 மணி நேரம் கனமழை பெயத்தது. இன்று காலை 8 மணி நிலவரப்பட்டி 135.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story