தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி. ஆக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பி.ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பிரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம்-ஒழுங்கு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story