மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயணஅட்டை: மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு அலுவலகங்களில் வழங்கப்படும் - மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு அலுவலகங்களில் உடனுக்குடன் வழங்க மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் கோ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் பயணம் செய்திட ஏதுவாக, இலவச பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகவும், புதுப்பிக்கப்பட்டும் வழங்கப்படுகின்றன. இந்த பயண அட்டைகளின் கால வரம்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை ஆகும். அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட 2 ஆயிரத்து 56 மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அட்டைகள் சென்னை கே.கே.நகர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பயண அட்டைகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பிற மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயண அட்டையானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு அலுவலகங்களில் (விண்ணப்பம் பெறுகின்ற அலுவலகம்) உடனுக்குடன் வழங்க மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் pr-o-mtc123@gm-a-il.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 044-23455801 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story