விபத்தில் சிக்கியவரை மீட்ட அமைச்சர் ஜெயக்குமார்; தானே முதலுதவி செய்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்
அமைச்சர் ஜெயக்குமார் விபத்தில் சிக்கியவரை மீட்டதோடு தானே முதலுதவி செய்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை,
சென்னை துறைமுகத்தின் நுழைவுவாயில் அருகே நேற்று 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கி, காயம் அடைந்த நபரை சாலையோர நடைபாதையில் வைத்து முதல் உதவி செய்தார். பின்னர் ஆம்புலன்ஸை அழைத்ததோடு, விபத்தில் காயம் அடைந்த நபரை, அமைச்சர் ஜெயக்குமார் கைத்தாங்கலாக தூக்கி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.
அத்துடன் காயம் அடைந்த நபரை உடன் இருந்து கவனித்துக்கொள்ளுமாறு ஆட்டோ டிரைவர் ஒருவரையும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். மேலும் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்த பகுதியில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்திய போலீஸ்காரரிடம் விவரித்தார். இதையடுத்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த மனிதநேய பண்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. சாலையில் சென்றவர்கள் ஜெயக்குமாரின் உதவிக்கு, புகழாரம் சூட்டினார்கள்.

Related Tags :
Next Story