எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.
சென்னை,
வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் விஜய் ரசிகர்கள், அவரை எம்.ஜி.ஆரை போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- கப்பல் ஓட்டியவர்களெல்லாம் வ.உ.சி. ஆகிவிட முடியாது. மீசை வைத்தவன் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டையை ஏறியவன் எல்லாம் ராஜாதேசிங்கன் ஆகிவிட முடியாது. ஆக புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்பது அவர் மட்டும்தான். அதேபோல் தான் ஜெயலலிதாவும். அவர்கள் 2 பேர் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் 2 பேரும் மாபெரும் சக்திகள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல சித்தரித்தாலும் அவர்களை போல நிச்சயம் வரமுடியாது.
கேள்வி:- அமைச்சர்கள் கூறும் கருத்தை ஏற்கமுடியாது என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் எல்.முருகனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் பேசி இருக்கிறார்களே?
பதில்:- அமைச்சர் பேசக்கூடாது என்று கட்டளை போடக்கூடாது. அப்படி சொல்வதற்கு இவர்கள் யார்?. எங்களை பொறுத்தவரையில் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். நூல் அளவுக்கூட தர்மத்தை நாங்கள் மீறவில்லை. கூட்டணியில் இருந்துகொண்டு கருத்துகள் சொல்லலாம். ஆனால் அந்த கருத்துகள் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். விமர்சனங்கள் அதிகமாக வரும்போது வாய்மூடி இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு சில கருத்துகளை சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். நாங்கள் யார் காலையும் மிதிக்கமாட்டோம். அப்படி நம்முடைய காலை மிதித்தால் அவர்களை விடவும் கூடாது. இதுதான் எங்கள் தாரகமந்திரம். கூட்டணியில் இருப்பவர்கள் தார்மீக பொறுப்பு, கடமை, தர்மத்தை கடைப்பிடிக்கவேண்டும். கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யவேண்டிய விஷயம். அமைச்சர்கள் யாரும் முடிவு செய்ய முடியாது. எந்த நிலையையும் எதிர்கொள்ள அ.தி.மு.க.வும், அதன் தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.தான் என்ற நிலையை நிரூபிப்போம்.
கேள்வி:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என அவருடைய ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது, ஆரம்பிக்காமல் போவது அவருடைய விருப்பம். அவர் உண்டு. அவருடைய ரசிகர்கள் உண்டு. அவரை நம்பி இருக்கிற தொண்டர்கள் உண்டு.
கேள்வி:- சசிகலா இந்த மாதம் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ சிறையில் இருந்து வெளியே வரப்போவதாக தகவல்கள் வருகிறது. அவர் வந்த பிறகு அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பதில்:- சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவாரா?, வரமாட்டாரா? என்பது சட்டத்தின்படிதான் இருக்கும். அவர் வந்தாலும், வராவிட்டாலும் அதை பொருட்டாக கருதவில்லை. சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் இல்லாதநிலையை கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக நடத்துவது தான் எங்களின் கொள்கை, நிலைப்பாடு.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Tags :
Next Story