திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 6 Sept 2020 7:29 AM IST (Updated: 6 Sept 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கொடியேற்றம், 5-ம் திருநாள் குடைவரை வாயில் தீபாராதனை, 7, 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் வசதிக்காக https://youtu.be/MjiiXtXHNVI என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக பார்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story