கோவையில் வீடு இடிந்து விபத்து: முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. இவர் பிளக்ஸ் போர்டு செய்யும் தொழில் செய்து வருகிறார். தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கட்டப்பட்டு இருந்த இந்த வீட்டில் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று டமார் என்ற சத்தத்துடன் அந்த வீடு இடிந்து விழுந்தது.
இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கிக்கொண்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் மீட்கமுடியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், கோவை தெற்கு தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். குறுகலான பகுதி என்பதால் மீட்பு பணி தாமதம் ஆனது. இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த கண்ணனின் தாய் வனஜா (வயது 68) என்ற பெண்ணும், மனநிலை பாதிக்கப்பட்ட கவிதா என்ற பெண், கண்ணன் ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
கண்ணனின் மனைவி சுவேதா (28), அவருடைய 6 வயது மகன் தன்வீர் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்தனர். சிறுவனின் குரல் இடிபாடுகளுக்குள் கேட்டது. ஆனால் தொடர்ந்து கட்டிடம் மண்ணில் மேலும் புதைந்து கொண்டே இருந்ததால் மீட்க முடியவில்லை. இரவு 11.45 மணியளவில் சிறுவன் தன்வீர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சுவேதாவை மீட்கும் பணி அதிகாலை வரை நடைபெற்றது. அதனைதொடர்ந்து அவரது உடலை மீட்டனர்.
கட்டிட இடிபாடுகள் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள்ளும் விழுந்தது. அந்த வீட்டுக்குள் இருந்த கஸ்தூரி, கோபால், மணி ஆகிய 3 பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது. அதில் கோபால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கொமாராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பழைய இரண்டு அடுக்கு மாடி வீடு நேற்று (செப். 6) எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததுடன், அருகாமையிலுள்ளள ஓட்டு வீடும் முழுமையாக இடிந்து விட்டது. இந்த விபத்தில் கான்கிரீட் கட்டிடத்திலிருந்த கண்ணன் என்பவரின் மனைவி சுவேதா என்கிற ஷாலினி மற்றும் ஓட்டு வீட்டிலிருந்த கருப்பண்ண ஆசாரி என்பவர் மகன் கோபால் சாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story