கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு


கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு
x
தினத்தந்தி 7 Sep 2020 10:51 AM GMT (Updated: 7 Sep 2020 10:51 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி,

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும்  1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் நேற்று 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story