ஒளியற்ற விழிகளின் வாழ்வின் இருள் நீக்கிட மனமுவந்து கண் தானம் செய்வோம் - ஓ.பன்னீர்செல்வம் டுவீட்
ஒளியற்ற விழிகளின் வாழ்வின் இருள் நீக்கிட மனமுவந்து கண் தானம் செய்வோம் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்த விழிப்புணர்வு நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாளை (8-ம் தேதி) 35 ஆம் ஆண்டு தேசிய கண்தான தினம் அனுசரிக்கப்படுவதால் தன்னுடைய கண்களை தானம் செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
கண் தானம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கண் தானம் செய்ய விரும்புவோர் https://hmis.tn.gov.in/eye-donor/ என்ற லிங்கை பயன்படுத்தி, தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கண்தானம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஈ- சான்றிதழையும் உடனடியாக பதிவிறக்கலாம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"தானத்தில் சிறந்த தானம் கண்தானம்" என்னும் கூற்றுக்கிணங்க, கண்களை ஒருவருக்கு பரிசளிப்பது இப்பிரபஞ்சத்தையே பரிசளிப்பதற்கு ஒப்பாகும். ஒளியற்ற விழிகளின் வாழ்வின் இருள்நீக்கிட மனமுவந்து கண்தானம் செய்வோம்; பார்வையற்றோர் இல்லாத உன்னத நிலைக்கு உலகை உயர்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

"தானத்தில் சிறந்த தானம் கண்தானம்" என்னும் கூற்றுக்கிணங்க, கண்களை ஒருவருக்கு பரிசளிப்பது இப்பிரபஞ்சத்தையே பரிசளிப்பதற்கு ஒப்பாகும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 7, 2020
ஒளியற்ற விழிகளின் வாழ்வின் இருள்நீக்கிட மனமுவந்து கண்தானம் செய்வோம்; பார்வையற்றோர் இல்லாத உன்னத நிலைக்கு உலகை உயர்த்துவோம்!#NationalEyeDonationDay
Related Tags :
Next Story