ரவுடி என்கவுண்ட்டர் வழக்கு: ஐகோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அறிக்கை தாக்கல்


ரவுடி என்கவுண்ட்டர் வழக்கு: ஐகோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 9 Sept 2020 1:00 AM IST (Updated: 9 Sept 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி என்கவுண்ட்டர் வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அறிக்கை தாக்கல் செய்தார்.

சென்னை, 

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கரை கடந்த மாதம் போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, என்கவுண்ட்டர் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி விசாரணையும் நடந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடியின் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையை எழும்பூர் மாஜிஸ்திரேட்டும், புலன் விசாரணை தொடர்பான அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எழும்பூர் மாஜிஸ்திரேட்டு சிவசக்திவேல் கண்ணன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Next Story