மாநில செய்திகள்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி + "||" + Aryan students pass: Government decision is final - Chennai University Vice Chancellor interview

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
அரியர் மாணவர்கள் தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில், அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கவுரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது. பல்கலைக்கழக மானியக்குழு உள்பட இதர அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த அரியர் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
2. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் : ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. ‘மாணவர்களின் மனித கடவுளே’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர்
மாணவர்களின் மனித கடவுளே என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கோவையில் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.