ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு


ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
x
தினத்தந்தி 10 Sept 2020 11:33 AM IST (Updated: 10 Sept 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 128 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னை,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் சரிவு போன்றவற்றால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்திற்கு மேல் சென்றது.

இதன்பின்னர் தங்கம் விலை கடந்த ஆகஸ்டு மாதம் குறையத் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400 வரை குறைந்தது. ஆகஸ்டு மாத இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.39,176க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 128 ரூபாய் உயர்ந்து ரூ.39,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.70க்கு விற்பனையான நிலையில் இன்று 90 காசுகள் உயர்ந்து ரூ.70.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story