8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 10 Sept 2020 1:19 PM IST (Updated: 10 Sept 2020 1:19 PM IST)
t-max-icont-min-icon

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை,

விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் இன்று நடைபெற்றது

இந்த முகாமினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், வேளாண்மை கல்லூரி முதல்வர் பால்பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

8 மாதங்கள் இல்லை எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வகுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி

திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஆனால் இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Next Story