கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2020 10:35 AM GMT (Updated: 10 Sep 2020 10:35 AM GMT)

கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சந்தை மூடப்பட்டு, காய்கறி சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வியாபாரிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக அங்காடி திறக்காததால் 700க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மனுவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Next Story