டாக்டர் ராமதாஸ் வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் - ஐகோர்ட்டு உத்தரவு


டாக்டர் ராமதாஸ் வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Sept 2020 6:26 AM IST (Updated: 11 Sept 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் ராமதாஸ் வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முரசொலி அறக்கட்டையின் அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராமதாசை நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையும், விசாரணைக்கு நேரில் ஆஜராக ராமதாசுக்கு விலக்கும் அளித்தது. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீசும் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற அக்டோபர் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story