தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 11 Sept 2020 3:45 PM IST (Updated: 11 Sept 2020 3:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி,

நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 15 ஆம் தேதி மீண்டும் நடக்கும் கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்த உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகத்தில் தியேட்டர்களை உடனே திறக்க கோரி மனு அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் திரையரங்குகளை உடனே திறந்தால்தான் அதை நம்பியுள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனில் பாதிப்பு ஏற்படும். ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் அதிமுகவுக்கு இருமொழிக்கொள்கைதான். மொழி தொடர்பான கொள்கையில் திமுகவினர் எந்த அளவில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story