"வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் நமக்கு பாடம்தான்" - மு.க.ஸ்டாலின் பேச்சு
மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த எச்.வசந்தகுமார் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.
இதில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறைந்த காங்கிரஸ் எம்.பி, வசந்தகுமார் வாழ்வு மட்டுமல்ல அவரின் மரணமும் நமக்கு பாடம்தான். கொரோனாவுக்கு தடுப்பூசியோ மருந்தோ இல்லை என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . மேலும் கை கழுவ வேண்டும் என நமக்கு அறிவுரை சொல்லிவிட்டு மத்திய - மாநில அரசுகள் நாட்டை கை கழுவி விட்டன என்று விமர்சன் செய்துள்ளார்.
காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற வசந்தகுமாருக்கு நினைவு அஞ்சலிக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story