திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனையில் முடிவு


திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனையில் முடிவு
x
தினத்தந்தி 12 Sept 2020 11:27 AM IST (Updated: 12 Sept 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

சென்னை,

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14,15,16 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு சட்டப்பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

Next Story